Thursday, 11 August 2016

"நிலம் எனும் நல்லாள்"

"நிலம் எனும் நல்லாள்"

என்னவோ தெரியல்ல இன்று முழுவதும் எனக்கு மாறி மாறி நிலம் பற்றிய சிந்தனைகளே தொடர்கின்றன.நிலம் எனும் நல்லாள் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறாள்.

உலகில் பெரும் யுத்தங்கள் நிலம் பற்றியே பெரும் அழிவுகளை சந்தித்திருக்கின்றன அலக்சாண்டர் முதல் இன்றய அரசுகள் போராளிகள் என நிலம் பற்றிய சர்ச்சைகளே பெரும் அழிவுகளை சந்தித்திருக்கின்றன.

மனித நாகரிகம் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலும் நிலத்துக்கான அடிபாடுகள் தொடர்கின்றன.தமிழ் நாட்டிலுள்ள பெரு வழக்குகள் நிலத் தக்ராறு தொடர்பானதாகவே உள்ளது.இதனால் கொலைகளும் தற்கொலைகளும் நீள்கின்றன.

மனிதர்கள் மனிதர்களாக இல்லை ,பணம் வந்தால் எல்லா அதிகாரங்களும் தங்கள் கைக்கு வந்ததாக நினைக்கிறார்கள்.இதனால் குடும்ப உறவுகள் சிதறுகின்றன்.மனித  நேயம் மரத்துப் போகிறது.

சிலர் வாட சிலர் வாழ இந்த உலகம் படைக்கப் பட்டிருக்கிறது.கூலி,உழைப்பு சுரண்டல் என முதலாளித்துவ மனோபாவத்தில் மனிதர்கள் தறி கெட்டு அலைகின்றனர்.

சிலரிடம் அளவுக்கு அதிகமான சொத்தும் ஆடம்பரமும் கொடிகட்டி பறக்க ஒரு வேளைக் கஞ்சிக்கு வழியின்றி தவிக்கும் பல கோடி மனிதர்கள்.சமனற்ற உலகம் எல்லாமும் எல்லோருக்கும் வேண்டும்  என்கிற  சமூக அரசியல் முன்னெடுக்க படவேண்டும்.

மதத்தின் பெயரால் சுரண்டும் சாக்கடைகள்  அழிக்கப் பட வேண்டும்.
கடவுள் படைத்த உலகு காணச் சகிக்கவில்லை கடவுள் கடவுள் என்று சொல்வோர் பலர் போலி வேடதாரிகளாய் அலைகின்றனர்.கடவுளின் பெயரால் எல்லா அனாச்சாரங்களும் அரங்கேற்றப் படுகின்றன.

No comments:

Post a Comment