நான் வேறு நீங்கள் வேறு
நான் வேறு நீங்கள் வேறு
சொந்தம் என்ற ஒரு சொல்
உங்களையும் என்னையும்
சந்திக்க வைக்கிறது
நான் பயணிக்கும் உலகு
விசித்திரமானது விந்தைகள் நிறைந்தது
அற்புதங்கள் நிகழாது- ஏனெனில்
இங்கு ஆண்டவன் இல்லை
மாயப் பொய் கூறி
மகுடி வாசித்து மயக்கும்
மந்திரவாதிகள் இங்கில்லை
மனிதம் எங்கள் மதம்
நாங்கள் வந்த பாதை பயங்கரமானது
கால்களில் செருப்பின்றி
நடந்த நாட்கள்
படுக்க பாயின்றி ஒரு பாயில்
என் சகோதரர்களுடன்
உறங்கிய நாட்கள்
எப்போ வருவாரோ என
எதற்கும் காத்திருப்பு இல்லை
மாக்சும் லெனினும் மா ஓவும்
மகத்தான தோழர் சேகுவெராவும்
என்றும் எங்களுடன்
நான் வேறு நீங்கள் வேறு
சொந்தம் என்ற ஒரு சொல்
உங்களையும் என்னையும்
சந்திக்க வைக்கிறது
நான் பயணிக்கும் உலகு
விசித்திரமானது விந்தைகள் நிறைந்தது
அற்புதங்கள் நிகழாது- ஏனெனில்
இங்கு ஆண்டவன் இல்லை
மாயப் பொய் கூறி
மகுடி வாசித்து மயக்கும்
மந்திரவாதிகள் இங்கில்லை
மனிதம் எங்கள் மதம்
நாங்கள் வந்த பாதை பயங்கரமானது
கால்களில் செருப்பின்றி
நடந்த நாட்கள்
படுக்க பாயின்றி ஒரு பாயில்
என் சகோதரர்களுடன்
உறங்கிய நாட்கள்
எப்போ வருவாரோ என
எதற்கும் காத்திருப்பு இல்லை
மாக்சும் லெனினும் மா ஓவும்
மகத்தான தோழர் சேகுவெராவும்
என்றும் எங்களுடன்
No comments:
Post a Comment