''உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே"
இது தொல்காப்பிய சூத்திரம்.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தொல்காப்பியம் பற்றிய விரிவுரைகளில் கற்பிக்கும் போது தொல்காப்பியத்தின் சமூகவியல் நோக்கு பற்றி விபரிப்பார்.
தொல்காப்பியம் தமிழின் முதன்மையான முதல் இலக்கண நூல்.உலகில் வேறு எந்த மொழிகளிலும் காணப்படாத வரண்முறைகளை விளக்கும் நூல்.குறிப்பாக பொருளதிகாரம் சிறப்பு வாய்ந்தது .
உலக மொழிகள் பலவற்றின் பழைய இலக்கண நூல்கள் மொழியயை பொருள் வயப் பட்டு பார்க்கவில்லை.

பாணினி மொழியின் கூறுகளைத்தான் விபரித்தார்.
இந்த ஒப்புமைகளினூடுதான் தொல்காப்பியர் முதன்மை பெறுகிறார்.
தொல்காப்பியம் அன்றய சமூக அமைப்பை வெளிப்படுத்துகிறது.நிறையவே சமூகவியல் செய்திகள் உள்ளன.சமூக அமைப்பை அதன் கூறுகளை தமிழ் வயப் பட்டு கூறுவது முக்கியம் பெறுகிறது.
No comments:
Post a Comment