எங்கே தொலைத்தேன் என்னை
இப்போதெல்லாம் நான்
தொலைந்து போனதாக ஒரு பிரமை
நான்
என் வீடு
என் குடும்பம்
என் சொந்தங்கள்
என் ஊர்
என் தேசம்
எல்லாம் தொலைந்து போயினவா
எங்கே தொலைத்தேன்
என்னை
நான் தொலைந்து
போவேனா?
இந்த
"வேடிக்கை மனிதரைப் போல"
பத்தோடு பதினொன்றாய்
இல்லை
இரத்தமும் சதையுமாய்
நிண நீர் குழித்து
என் மக்கள்
இன்று புதிதாய்
பிறந்திருக்கிறார்கள்
அவர்களில் ஒருவனாய்
நான்
இப்போதெல்லாம் நான்
தொலைந்து போனதாக ஒரு பிரமை
நான்
என் வீடு
என் குடும்பம்
என் சொந்தங்கள்
என் ஊர்
என் தேசம்
எல்லாம் தொலைந்து போயினவா

என்னை
நான் தொலைந்து
போவேனா?
இந்த
"வேடிக்கை மனிதரைப் போல"
பத்தோடு பதினொன்றாய்
இல்லை
இரத்தமும் சதையுமாய்
நிண நீர் குழித்து
என் மக்கள்
இன்று புதிதாய்
பிறந்திருக்கிறார்கள்
அவர்களில் ஒருவனாய்
நான்
No comments:
Post a Comment