Friday, 12 August 2016

அங்கதம்


அங்கதம்

தமிழ் இலக்கிய மரபில் அங்கத இலக்கியம் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
செம்பொருள் அங்கதம் ,பழிகரப்பு அங்கதம்  என பிரித்து பேசப் படுகிறது.

அங்கதம் என்ற போர்வையில் ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குகின்ற மரபை நவீன தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தவர் எஸ் பொ.என்று சொல்லலாம்.அவரது" பந்த நூலும் நச்சாதார்க்கினியார் உரையும்" பேராசிரியர் கைலாசபதி,பேராசிரியர்.சிவத்தம்பி அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே அது.
தமிழில் நீங்கள் வாசித்த எழுத்துக்களில் மிக மோசமான எழுத்து எது என கேட்டால நான் இதனையே குறிப்பிடுவேன்.இன்றும் சிலர்  இந்த போக்கில் எழுதுகின்றனர்.தங்கள் கொள்கையோடு உடன்படாதவர்களை  துரோகியாக பார்க்கும் மன நிலையிது

"கழுதை காவெனக் கண்டுநின் றாடிய அலகை
தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதி லாநமக்கு ஆர்நிக ராமெனப் பகர்தல்
முழுதும் மூடரை மூடர்கொண் டாடிய முறைபோலாம்''
(வி.சி.பா.49)


"கா'வெனக் கதறிய கழுதையின் குரல் கேட்டுக் களிப்புடன் கூத்தாடிய பேய் ஒன்று, அதைத் தொழுது துதி பாடுகிறதாம். அதைக்கேட்ட கழுதை, "இசையில் நமக்கு எவர் நிகராக முடியும்?' என்று இறுமாந்து கூறுகிறதாம்.

இது ஒரு வகை அங்கதம்

No comments:

Post a Comment