Sunday, 21 August 2016

அப்புச்சி

பல கோடி தடவை உச்சரித்தாலும்
மந்திரமாய் என்னுள் மயக்கும்
மயங்கும் மந்திரச் சொல்
என்ன நடந்தாலும் உற்சாகமிழந்த  அப்புச்சியயை
நான் கண்டதில்லை.
சோர்ந்திருந்த தருணங்களையும் நான் பார்த்ததில்லை.
என் வெற்றி    தோல்வி
துயரம்   எல்லா தருணங்களிலும்,
அப்புச்சி எனக்கு துணையாக எப்போதும்.
14 வருடங்கள் கடந்தாயிற்று
நினைவுகள் நீட்சியாய் என்னுள்
எப்போதும்.
சேனையூரில் உங்கள் சிம்மக் குரல்
இப்போதும் காற்றாய் அசைகிறது.
மீண்டு வரும் உங்கள் கனவுகள்
எண்ண எண்ண எழுத எழுத
தொடரும்......முடிவிலா
நீட்சி.....

No comments:

Post a Comment