கால் மாக்ஸ் -205
கால் மாக்ஸ் பிறந்து 205 ஆண்டுகள்
உலக வரலாற்றில் மாக்சின் பிறப்பு என்பது மனித விடுதலைக்கான திறவு கோல் என்பேன் நான்
உலகம் முழுவதும் பேரரசுகளும் அவற்றின் ஏகாதிபத்திய சுரண்டல்களும் அதிகரித்த ஒரு கால்கட்டத்திலேயே மாக்ச் பிறந்தார்.
கொடுங்கோன்மையும் அடிமைத்தனமும் மனிதனை மனிதன் சுரண்டி ஏப்பம் விடும் நாட்கள் அவை.
தனி மனித சுதந்திரம் காட்டாட்சிகளால் கொடூர முகம் கொண்டு முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் தத்தளித்து விடுதலைக்காக ஏக்கம் கொண்ட உலகின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மாக்சிய தத்துவம் மக்களுக்கானதாய் உருவானது.
கடவுளின் பெயராலும் கடவுளர்களாகவே தங்களை உருவகப் படுத்திக் கொண்ட ஆட்சியாளர்களின் பெயராலும் ஆண்டான் அடிமை சமூகமாக உலகம் வழி தெரியாமல் தடுமாறிய ஒரு காலத்தின் தேவையாய் மாக்சியத் தத்துவம் உருவானது.
மக்களுக்கான தத்துவமாய் முதலாளித்துவம் இருக்கும் வரை மாக்சியத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கும் .
மாக்ஸ் நம்மோடு இருப்பார்
No comments:
Post a Comment