Friday, 26 May 2023

 முள்ளி வாய்க்கால்

துயரம் என்ற
சொல்லுக்கு மேல்
ஒரு சொல் இருக்குமானால்
அது முள்ளி வாய்க்கால்
மனிதம்
மரணித்த நாட்கள்
யார்க்கெடுத்து உரைப்போம்
என ஏங்கிய மக்கள் கூட்டம்
வலி சுமந்தலைந்தோம்
என்ற சொற்றொடருக்குள்
அடக்க முடியாத
அவலப் பெரு வெளி

No comments:

Post a Comment