Friday, 4 December 2020

புகழான சேனையூரே

 புகழான சேனையூரே
 

 

 
சிற்றாறு ஓட சிறு நண்டு வளை தேடும்
முற்றிய வெண் முத்து ஒளி தந்து தான் உடையும்
வற்றாத உயிர் ஆறு ஊர் சூழ தான் நீளும்-உன்
பொற்பாதம் போற்றுகின்றோம் புகழான சேனையூரே

 
 
கொண்ட்டாட்டம் வந்து விட்டால்குதுகலித்து மகிழாடும்
திண்டாட்டம் இல்லாமல் தெருவெல்லாம் பூச் சூடும்
வண்டாடும் சோலையெலாம் வாசமிங்கு ஆட்சி செய்யும்
பண்டாளும் சேனையூரே பாரில் இங்கு காணீரோ
 
தென்றல் இங்கு தினம் தோறும் தெவிட்டாமல்
முன்றில் வந்து முகம் காட்டி அன்றில் தேடி அது நீளும்
கொன்றை இங்கு குலை குலையாய் பூத்திருக்கும்
மன்றில் எல்லாம் மயில் கொன்றை தாலாட்டும்
 
மழையாறு ஊரெல்லாம் மறி கொண்டு ஓடி வரும்
நுளையாத இடமெல்லாம் இடம் தேடி தான் ஊரும்
களியாறு கரை புரண்டு கயல் கெண்டை புரண்ட்டோட
கெழிறோடி வளம் காணும் வற்றாத சேனையூரே

 

No comments:

Post a Comment